tamilnadu

img

கே. பாலகிருஷ்ணன் உண்டியலேந்தி நிதி வசூல்

கே. பாலகிருஷ்ணன் உண்டியலேந்தி நிதி வசூல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது  அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கான நிதியை திரட்டும் வகையில், கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (பிப்.14) புரசைவாக்கம் மார்க்கெட்டில் உண்டியல் வசூல் நடைபெற்றது. இந்த நிதிவசூல் இயக்கத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து, உண்டி ஏந்தி வசூல் செய்தார். 15 குழுக்கள் நிதி வசூலில் ஈடுபட்டன. ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வசூலானது. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முரளி, சி. திருவேட்டை, எஸ்.கே. முருகேஷ், கே. முருகன், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே. ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே. மூர்த்தி, நாகராணி, எஸ். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.