கொச்சி, மார்ச் 7- ஒருபோதும் மறக்க முடியாத கொடுமைகளையும் நெருக்கடி களையும் அனுபவித்தது குறித்து நடிகை பாவனா முதல்முறை யாக வெளிப்படையாகப் பேசி யுள்ளார். மகளிர் தினத்தை யொட்டி மூத்த பத்திரிக்கையா ளர் பர்கா தத்துடன் பேசினார். ‘வி வித் விமன்’ நிகழ்ச்சியில் பேட்டியளித்த பாவனா, தான் இரையல்ல என்றும், நீதிக்கான போராட்டம் எளிதானது அல்ல, ஆனால் அது இறுதி வரை தொட ரும்,” என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘மீண்டு வருவது மிகவும் கடி னம். ஆனால் மலையாள சினிமா வுக்கு மீண்டும் வருவேன். நான் விலகி நின்றது என் மன அமை திக்காக. சாட்சியம் அளித்த 15 நாட்கள் மிகவும் கடினமானவை. மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்ட கேள்விகளைக் கடந்து, நான் குற் றமற்றவள் என்பதை நிரூபிக்க வேண்டியிருந்தது. நான் முற்றி லும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த நாட்கள் அவை. வெளிப்படையாகப் பேசியதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்பா இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக் காது. மோசமாக வளர்க்கப் பட்டவள் என்று என்னை பலரும் சொன்னார்கள். ஆனால் குடும் பத்தினரும் திரையுலகில் உள்ள நண்பர்களும் துணை நின்றார் கள். துணை நின்ற அனை வருக்கும் நன்றி. இதுபோன்ற இன்னல்களை எதிர்கொள் ளும் பெண்களை சமூகம் வித்தியாச மான கண்ணோட்டத்தில் பார்க்கி றது. அது மாற வேண்டும். மறு வாழ்வு பெற்று திரும்பியவர் களை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது மீள் வரு கையை வரவேற்று, ஆதரவ ளிக்க வேண்டும் என்று பாவனா கூறியுள்ளார்.