சென்னை,ஜூலை 23- சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடை பெறுகிறது. அதற்கான முன்னேற் பாட்டு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வவேலு, “ வருகிற 28 ஆம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள் கின்றனர்” என்றார். தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பாரம்பரிய கலாச் சாரங்களை பறைசாற்றும் கலை விழா நடைபெறுகிறது. இந்த விழா வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். நேரு உள்விளை யாட்டு அரங்கம் 6 ஆயிரம் பேர் அமரும் உள் அரங்கம். 187 நாட்டின் 1500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள் கின்றனர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திரு வள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்க ளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங் கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.