tamilnadu

எது தம்பி! - அருப்புக்கோட்டை செல்வம்

உன்னை ஒன்று கேட்பேன் தம்பி
 உடனே சொல்வாயா?
என்னை எதுவும் கேளுங்கண்ணா
தெரிந்ததைச் சொல்கின்றேன்!

அறம் பொருள் இன்பம் சொல்கின்ற
அறநூல் எதுதம்பி?
திருக்குறள் என்றே சொல்லலாம்
தினம் படித்தாலே வெல்லலாம்!

இளங்கோ அடிகள் செதுக்கித் தந்த
காப்பியம் எதுதம்பி?
சிலப்பதி காரம் பாடலாம்
சீரிய தமிழை நாடலாம்!

ஒற்றை வரியில் உலகை வியக்க
வைத்தவர் யார்தம்பி?
ஆத்திச்சூடி மூதுரை நன்னூல்
ஔவை தந்த நந்நூல்!

பாரதி பாரதிதாசன் பற்றி
பகிர்ந்து கொள்தம்பி?
தமிழை அவர்கள் கற்றது
தமிழால் பெருமை பெற்றது!

தமிழை நன்றாய் எவரும் அறிய
தகுதி சொல்தம்பி?
இலக்கண இலக்கியம் சொல்வோம்
தமிழைத் தமிழால் வெல்வோம்!