சென்னை, ஜூன் 13- மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் இருந்து கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும், பானை தொழில் செய்வதற்கும் மண் எடுத்துச் செல்ல அனும தித்து தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பரா மரிப்பில் உள்ள கண்மாய் கள், குளங்கள், ஏரிகள், நீர்த் தேக்கங்கள், கால்வாய்களி லிருந்து விவசாயப் பயன் பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர் களால் அனுமதி அளிக்கப் பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு களில் இருந்த நல்ல மழைப் பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், வேளாண் பெருமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன் பெற்றிட இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது இந்த நீர் நிலை களில் நீர் இருப்பு குறை வாக இருக்கக் கூடிய சூழ் நிலையில், இவற்றை தூர் வாரி, கொள்ளளவை உயர்த் தினால், வரும் மழைக்காலத் தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க இயலும். இவ்வாறு மண்ணெடுத்து விவசாய பயன்பாட்டிற்காக பயன் படுத்திட விவசாயிகளிடமி ருந்து கோரிக்கைகள் பல வரப்பட்டுள்ளன. விதிமுறைகளில் திருத்தம் அதன் அடிப்படையில், முதலமைச்சரின் அறிவு றுத்தலின் பேரில் சிறு கனிம விதிகளில் தேவையான திருத் தங்கள் மேற்கொள்ளப் பட்டது, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண் மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து கட்ட ணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வ தற்கும் மண் எடுக்க சம்பந் தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப் படும். இது மட்டுமன்றி, விவ சாயிகள் தாம் வசிக்கும் வட் டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப் படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் இந்த புதிய நடைமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.