tamilnadu

img

பாலியல், குடும்ப வன்முறை புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, ஆக. 5 - பாலியல், குடும்ப வன்முறை புகார்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி பகுதிக் குழு சார்பில் நடைபெறும் பிரச்சா ரத்தை வியாழனன்று (அக.4) திருவான்மியூரில் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரதட்சனை கொடுமை, பாலியல் துன்புறுத்தல், ஆணவக் கொலை, கடத்தல், குழந்தை திரு மணம், பெண்சிசு கொலை போன்றவை  அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றங்களை அரசு கண்டும் காணாமல் இருக்கக் கூடாது. இவை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றார். பெண்கள் தங்களுக்கு இழைக் கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து புகார் செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இத்தகைய புகார்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு கால்களால் நடப்பதுபோன்று, ஆண், பெண் சமத்துவம் நிலவினால்தான் சமூக முன்னேற்றம் சாத்தியமாகும். சமத்துவமின்றையே குடும்ப வன்முறைக்கு காரணமாக உள்ளது என்றும் அவர் கூறினார். தொழிற்சாலை, அரசு அலுவல கங்களில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அமலாகாமல் உள்ளது. இதை அரசு சரி செய்ய வேண்டும் என்று ராமகிருஷ்ணன் வலி யுறுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

பழைய சோற்றுக்கும் ஜிஎஸ்டி போடுவார்களோ?

செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த ராமகிருஷ்ணன், உப்புக்கு வரிபோட்டதை எதிர்த்து காத்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். இதன்காரணமாக உணவு பொருட்களுக்கு வரி போடக்கூடாது என்று ஆங்கிலேயேர்கள் முடிவெ டுத்தனர். ஆனால், 75வது சுதந்திர தினம் கொண்டாடும் சூழலில், ஒன்றிய அரசு உணவு பொருட்கள் மீது வரி போடுகிறது. பழைய சோற்றுக்கும் ஜிஎஸ்டி போடுவார்களோ? என்று மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்று சுடு காட்டை கூட விட்டுவைக்காமல் வரி  போட்டுள்ளனர். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு ஒன்றிய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்து விட்டு, ஏழைகள் மீது வரியை ஏற்று கிறது. இப்படிப்பட்ட அரசு நீடிக்க வேண்டுமா? என்று மக்கள் முடி வெடுக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வின்போது மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.முக மது ரஃபீ உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

;