அரசியலமைப்பின் நான்கு அடிப்படை தூண்கள் - மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை - கடுமையாக தாக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிப்பது என்பது தேர்தல் ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல், கருத்தியல், கலாச்சார மற்றும் சமூக தளங்களில் தொடர்ந்த முயற்சிகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்துத்துவ வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராட சமரசமற்ற மதச்சார்பின்மையை முன்னெடுப்பதன் மூலமே முடியும்.