tamilnadu

img

உதவித்தொகையை உயர்த்தி வழங்கிடுக!

செங்கல்பட்டு, செப். 21- மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோயில் அருகே தோழர் டி.லட்சுமணன்  நினை வரங்கில் செப்.20,21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   மாநிலத் தலைவர் பா.ஜான்ஸி ராணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அகில இந்திய பொருளாளர் எஸ்.நம்புராஜன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தாட்சா யிணி நன்றி கூறினார். மாநாட்டின் மொத்த  நிகழ்வுகளையும் எச்.சுந்தர், எஸ்.மகா லட்சுமி, என்.வினோத் ஆகியோர் சைகை மொழியில் மொழிபெயர்த்தனர்.

தீர்மானங்கள்

மாற்றுத்திறாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை 3 ஆயிரம் ரூபாயா கவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் பெற மீண்டும் நிபந்தனைகளைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மனவளர்ச்சி குன்றியோருக் கான சிறப்பாசிரியர்கள், பேச்சு பயிற்சி யாளர்களை உடனே நியமனம்செய்ய வேண்டும், அரசுப் பணியிட நியமனங் களுக்குப் பட்டியலின மக்களுக்கு வழங்கு வது போல் கல்வி, வேலையில் மற்றும்  கல்வித் தகுதியில் தளர்வு அளிக்க வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் ஏஏஒய் ரேஷன் கார்டு வழங்க வேண்டும், 

குற்றப்பத்திரிகை தாக்கல் நிகழ்ச்சி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர் களுக்கு போக்குவரத்து பயணப்படி, மருத்துவ ஆய்வு கால விடுமுறைகள், உரிய பணி ஒதுக்கீடுகள், தனிச்சிறப்பு ஓய்வறை கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு கால் பாதிக்கப்பட்டோருக்கும் இலவச மோட்டார் வாகனம் வழங்கவேண்டும், டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளி கள் தினத்தன்று பொதுமக்களைச் சந்தித்து மோடி அரசு மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நட த்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாநிலத் தலைவராக தோ.வில்சன், பொதுச் செயலாளராக பா.ஜான்ஸிராணி, பொருளாளராக கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநி லச் செயலாளர்களாக ஜெ. ஜானகி ராஜா, எஸ்.பகத்சிங், பி.ஜீவா, பி.ராஜேஷ், துணைத் தலைவர்களாக எஸ்.நம்பு ராஜன், பி.எஸ்.பாரதி அண்ணா, கே.பி. பாபு, வி.ராதாகிருஷ்ணன்,  சி.ரமேஷ்பாபு, துணைச் செயலாளர்களாக ஜி.தமிழ்ச் செல்வி, எம்.அப்பு (எ) வெங்கடேஷ், இ. ஜெபஸ்டின் ராஜ், எம்.சொர்ணவேல் உள் ளிட்ட 80 பேர் மாநிலக் குழு உறுப்பினர் களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.


 

;