tamilnadu

img

தமிழக பட்ஜெட் 2022-23 ,கல்வித்துறைக்கு முக்கியத்துவம்

சென்னை,மார்ச் 18- தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான முதல் முழு நிதிநிலை அறிக்கையை நிதி யமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 18) தாக்கல் செய்தார். நிதிநிலைஅறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர்  2014-ம் ஆண்டுக்கு பிறகு  முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை ரூ.7,000  கோடிக்கு மேல் குறையும் என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோய், வெள்ளம் உள்ளிட்டவற்றை சமாளிக்க அரசு மேற்கொண்ட  நடவடிக்கையை சுட்டிக்காட்டிய அமைச்சர்  இவை  மாநிலத்தின் நிதிநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். மேலும், இந்த சவாலான ஆண்டில், நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தெளிவான பார்வை,  நிர்வாகத் திறன் ஆகிய திமுக அரசின் நடவடிக்கையால் நிதி நிலைமை யில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுயமரியாதை,  நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியை அடிக்கோடி ட்டுக் காட்டிய அவர்  அனைவரையும் உள்ளட க்கிய வளர்ச்சிக்கும் உந்துதலாக, ‘திராவிட முன்மாதிரி’ வளர்ச்சி உள்ளது என்றார்.

நிறைவேறும் தேர்தல் வாக்குறுதிகள்

வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்கு றுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவி யேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதி களை முதலமைச்சர் நிறைவேற்றினார். மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக உலகளவில் பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்பு உள்ளது  வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான, பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறப்பு ஆலோசனைக் குழு

15-வது நிதி குழுவின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஒன்றிய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும். முறையான நிதி பகிர்வை ஒன்றிய அரசு  தமிழகத்திற்கு வழங்கவில்லை.  ஒன்றிய, மாநில நிதி உறவுகளை வழிநடத்த சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.  வானிலையை கணிக்க  புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்ட மைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளத்தடுப்புக்கு ரூ.500 கோடி

அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிர மிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடியும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய  அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.  கொற்கை யில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.  போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறது; சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங் களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

பெரியாரின் சிந்தனைகள்

தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திட வும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும்  கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் பதிப்பிட  5 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்படுவதாகவும் அவர்  கூறினார்.  தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்;   தமிழ் மொழி தொடர்பாக அகர முதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

10 மாவட்டங்களில் தூர்வாரும் பணி

குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த  10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல்; வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத் திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.  நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்பு களுக்காக ரூ. 2,787 கோடியும், பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   பாசனத் திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணி களுக்காகவும் ரூ.3,384 கோடியும் டெல்டா கடை மடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு ரூ. 10,285 கோடி

காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டை அறிவித்த நிதியமைச்சர்,  சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும் என்றார்.

பள்ளிக்கல்வித்துறைக்கு  ரூ.36 ஆயிரம் கோடி

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடியும் பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி யும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளி கள் அமைக்க ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு. அறிவு சார் நகரம் உருவாக்கப்படும், ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும்  அரசு பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இள நிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும் என்ற பயனுள்ள அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.

ரூ.1000 கோடியில் அரசு கல்லூரிகளுக்கு புதிய திட்டம்

அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம் படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டு களில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் இதற்காக செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 19 மாவட்டங்களில் உள்ள  அரசு மருத்துவமனைகள், ரூ.1,019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவ மனைகளாக மேம்படுத்தப்படும் என்ற அறி விப்பையும் முதல்வரின் விரிவான காப்பீடு  திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ள அறிவிப்பையும்  நிதியமைச்சர் வெளியிட்டார்.

பிரதமர் வீட்டுவசதித்திட்டம்

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ்,  2016-2020 ஆம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப் பட்ட 1,77,922 வீடுகளின் கட்டுமானப் பணி களை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்ப தற்காக கூடுதலாக வழங்கப்படும் 70,000 ரூபாய் உட்பட ஆண்டுதோறும் வீடு ஒன்றிற்கு மொத்தம் 1,68,000 ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் 2,30,788  புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 4,848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

(பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: 
5வது பக்கம்)