tamilnadu

டிச.7 இல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

சென்னை,டிச.2- அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என அதிமுக தலைமையகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 3, 4 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு  மனு தாக்கல் செய்யலாம் என்றும் டிசம்பர் 5 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். டிசம்பர் 6 மாலை 4 மணி வரை வேட்பு மனு வைத் திரும்பப் பெறலாம் .டிசம்பர் 7 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். பதிவாகும் வாக்கு கள் மறுநாள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாகப் பணியாற்றுவர்