சென்னை,அக்.12- சென்னை கிண்டியி லுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழிற்கூட்டமைப்பு தென்மண்டலத்தின் சார்பில் எதிர்காலத் திற்கான வேலைவாய்ப்பு கள் மற்றும் திறன்களில் மேம் படுத்துவது என்ற தலைப்பில் கல்வி 4.0 என்ற கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தொழிற்சாலைகளில் பணியாற்று பவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங் களை கொண்டுவந்துள்ளார். கல்லூரிகளுக்கும் தொழிற்சாலை களுக்கும் இடையே ஒரு உறவு இருக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டது தான் “நான் முதல்வன் திட்டம்”. தற்போதைய தேவைக்கேற்பவும், காலத்திற்கு ஏற்ப கல்வி என்பது மாற வேண்டும். கல்வியையும், தொழிலும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்” என்றார். கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்திலேயே ட்ரோன் உருவாக்கும் திட்டத்தை யும் முதலமைச்சர் செய்து காட்டியிருக்கிறார். இப்போது மாண வர்களே பல்கலைக்கழகங்களில் ட்ரோன் தயாரிக்கிறார்கள். படிக்கும் போதே தொழிற் சாலைக்கு சென்று பயிற்சி பெறுங் கள். மாணவர்கள் வேலை தேடு வதற்கு பதிலாக தொழில் துவங்கு பவர்களாக மாற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.