ஈரோடு, பிப்.8- ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவி கேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொட ர்ந்து, அந்த தொகு திக்கு இடைத்தேர் தல் அறிவிக்கப்பட் டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்க ணித்த நிலையில், “இந்தியா” கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்தி ரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதா லட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி களின் சார்பில் 13 வேட்பாளர்கள் மற்றும் 31 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத் தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர் தல் வாக்குப்பதிவு பிப்.5 அன்று நடை பெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,54,657 வாக்கு கள் (68%) பதிவாகின. அதே போன்று 251 தபால் வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், பதிவான வாக்குகள் சனிக்கிழமை அன்று எண்ணப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா, எஸ்.பி.ஜவகர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலையில் தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து மின்னணு வாக் குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) பதி வான வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. ஒரு கண்காணிப்பாளர் உதவியாளர், நுண் பார்வையாளர் என மொத்தம் 51 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் வி.சி.சந்திர குமார் 1,15,709 வாக்குகள் பெற்று, 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றார்.
டெபாசிட் இழந்த நாதக
ஈரோடு கிழக்கில் பதிவான, செல்லத் தக்க 1,54,990 வாக்குகளில், 16.7 சதவீதம் (அதாவது 25,883) வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட் பெற முடி யும். இந்நிலையில், 20 சுற்றுகள் முடிவ டைந்த நிலையில், நாதக வேட்பாளர் சீதா லட்சுமி 24,151 வாக்குகளை மட்டுமே பெற்றார். நாதக வேட்பாளர் உட்பட 45 பேர் டெபாசிட் இழந்தனர்.
நோட்டாவிற்கு அதிக வாக்குகள்
இத்தேர்தலில் போட்டியிட்ட யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் விருப்பத்தை பலர் தேர்வு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி நோட்டாவில் 5,721 வாக்குகள் பதிவாகி உள் ளன. கடந்த முறையைவிட ஈரோடு கிழக்கு தொகுதிகளில் அதிக வாக்குகள் நோட்டா வுக்கு கிடைத்துள்ளன.