tamilnadu

img

சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக டி.எம்.ஜெய்சங்கர் தேர்வு

கள்ளக்குறிச்சி, டிச.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட 23ஆவது மாநாடு டிசம்பர் 14,15 ஆகிய தேதி களில் சங்கராபுரத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு எம். செந்தில், ஏ.தேவி, பி.மணி ஆகியோர் தலைமை தாங்கி னர். மாநாட்டைத் துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பேசினார். இம்மாநாட்டில் 35 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாவட்டச் செய லாளராக டி.எம்.ஜெய்சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் செயற்குழு உறுப்பி னர்களாக ஜி.ஆனந்தன், டி. ஏழுமலை, பி.சுப்பிரமணி யன், எம்.கே.பூவராகன், எம். செந்தில், வி.சாமிநாதன், எம்.கே.பழனி, வி.ஏழுமலை, இ.அலமேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசினார். வரவேற்புக்குழு செயலாளர் ச.சசிகுமார் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

குதிரைசந்தல், தேவியா னந்தல் ஆகிய ஊர்களில் நடந்துள்ள ஆணவப்படு கொலைகளை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், உளுந்தூர் பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி ஆண்டிற்கு 200 நாள் வேலை தரவேண்டும். அரசு போக்குவரத்து பணிமனைகளில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் விசாகா குழு  அமைக்க வேண்டும், தனிநபர் கள் ஆக்கிரமிப்பில் உள்ள வக்போர்டு இடங்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் எனதீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.