சென்னை, டிச. 1- தமிழகத்தின் மிகச் ்சிறந்த இலக்கிய ஆளு மைகளில் ஒருவரான கவிஞர் சங்கை வேலவன் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகி லுள்ள சங்கராபுரத்தில் செவ்வாயன்று உடல் ்நலக்குறைவால் காலமா னார். தமிழ்ஒளியின் கவிப் ்பயணம், காவியக்குயில் எனும் நூல்களைப் படைத்து கவிஞர் தமிழ்ஒளிக்கு புதிய ஆரம் அணி வித்தவர். பொது உடைமைக்கவி பேனா திருமூர்த்தியின் கவிதை களைத் தொகுத்து நூலாக்கியவர். திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவியின் பாடல்களை கலைஞர் கருணாநிதியின் வேண்டு கோளுக்கிணங்கி மூன்று நூல்க ளாகத் தொகுத்து பாராட்டு பெற்ற வர். பொதுவுடைமை மேடைகளில் தனது பாடல்கள் மூலம் இயக்கத்தின் பால் மக்களை ஈர்த்த பாவலர் வரதரா சன் பாடல்களைத் தொகுத்து ஆவணப்படுத்தியவர்.
1.1.1950 - ல் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகிலுள்ள சங்கராபு ரம் எனும் சிற்றூரில் பிறந்து வாழ் ்நாளின் பெரும் பகுதியைச் சென்னை மாநகரில் முற்போக்கு இலக்கிய வாதியாக பயணித்தவர். இளமைக் காலத்தில் திராவிடர் கழக உண்மை இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டு தன் எழுத்துப் பணியைத் துவக்கியவர். பின்னர் இடதுசாரி இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் போன்ற அமைப்புக ளோடு உயிரோட்ட முள்ள தொடர்பிலி ருந்தார். நரிக்குறவர் இன மாணவர்களுக்கென துவக்கப்பட்ட திரு வள்ளுவர் குரு குலம் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி புரிந்த அவர், அம் மாணவர் ்களுடன் தோழமை உறவு கொண்டிருந்்தார். தனது சொந்தப் படைப்புகள், தொகுப் ்புகள் என நாற்பத்்தைந்திற்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார். தனது உடல்நிலையின் காரண மாக திருமணம் செய்து கொள்ளா மல் தனித்து வாழ்ந்து வந்தார். பொது வுடைமை மேடைகளில் கவி முழக்கம், பாடுதல் அவரது தனித்திறனாகும். உடல் நலம் குன்றிய நிலையில் தனது சொந்த ஊரில் செவ்வாயன்று (டிச30) காலமா னார்.
அவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது புகழஞ்சலியை செலுத்து வதுடன் அவரை இழந்து வாடும் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
சிபிஎம் இரங்கல்
கவிஞர் சங்கை வேலவன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் ்செயலாளர் ஆர்.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில் அவரது மறைவு இடதுசாரி கலை இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பு என்று கூறியுள்ளார்.