சென்னை, நவ.11- நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் டெல்லி கணேஷ் (80), சனிக்கிழமை இரவு கால மானார். ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து டெல்லி கணேஷ் உடலுக்கு இந்திய விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற விமானப்படை வீரர்கள், டெல்லி கணேஷ் உடல் மீது தேசியக்கொடி போர்த்தியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து டெல்லி கணேஷின் உடல் சென்னை நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.