புதுதில்லி, நவ.6- பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளிலி ருந்து மக்களுக்கு எவ்வித நிவாரணம் அளிக் கப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு, கலால் வரியிலிருந்து பெட்ரோலுக்கு லிட்டருக்கு 5 ரூபாயும், டீச லுக்கு லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்திருப் பது, மிகவும் அற்பத்தனமான குறைவு ஆகும், இது மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் அளிக்காது. ஒன்றிய அரசு இதுவரை விதித்திருக்கும் கலால் வரி மட்டும் பெட்ரோலுக்கு லிட்ட ருக்கு 33 ரூபாயாகவும், டீசலுக்கு லிட்டருக்கு 32 ரூபாயாகவும் இருப்பதால், இதில் மிகவும் அற்பமான முறையில் பெயரளவில் ஒரு வெட்டினை ஏற்படுத்தி இருப்பது, எரி பொருள்களின் அதீத விலை உயர்வின் கார ணமாக, பொருளாதாரத்தின் மீதும் மக்கள் மீதும் ஏற்பட்டுள்ள சுமை குறைந்திடாது.
சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜகவிற்கு பலத்த அடி விழுந்ததன் காரணமாக, ஒன்றிய அரசு இவ்வாறு மக்களை ஏமாற்றும் விதத்தில் ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. கலால் வரிகளில் கணிசமான அளவிற்கு வெட்டினை ஏற்படுத்தி, நியாயமான அள விற்கு எரிபொருள்களின் விலைகளைக் குறைப்பதே இதற்கு ஒரே வழியாகும். எரி பொருள்களின் மீது சிறப்பு செஸ் வரிகள் விதிப்பதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும். அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மத்தி யக்குழு வெளியிட்ட அறைகூவலுக்கி ணங்க கட்சியின் அனைத்துக் கிளைகளும் பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு களுக்கு எதிராக தங்கள் கிளர்ச்சிப் போராட் டங்களைத் தொடர்ந்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)