tamilnadu

img

முதுபெரும் தலைவர் கே.டி.கே.தங்கமணி குடும்பத்தைச் சேர்ந்த தோழர் சரஸ்வதி ராஜா மணி ரூ.4லட்சம் மதிப்புள்ள கட்டிடத்தை மார்க்சிஸ்ட் கட்சிக்கு வழங்கினார்

மதுரை:
மணப்பாறையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான சரஸ்வதி ராஜாமணி தன்னுடைய தாயார் ராஜம்மாள் தனக்குத் தந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள கட்டிடம் மற்றும் இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழுவிற்கு நன்கொடை யாக வழங்கியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் மார்க்கெட் பகுதியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இதற்கான பத்திரத்தை சரஸ்வதி ராஜாமணி மற்றும் அவரது கணவர் பி.கணபதி,இவர்களது மகன் ஜி.ராஜ்பாண்டியன் ஆகியோர் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினர். கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், கே.அரவிந்தன், திருமங்கலம் தாலுகாச்செயலாளர் ஜி.முத்துராமன், மாவட்டக்குழுஉறுப்பினர்கள் பிரேமலதா, வி.பிச்சை ராஜன் மற்றும் திருமங்கலம் தோழர்கள் உடனிருந்தனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த முதுபெரும் தலைவர் தோழர் கே.டி.கே.தங்கமணி அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி ராஜாமணி என்பது குறிப்பிடத்தக்கது.