tamilnadu

img

வருகுது வருகுது உழைக்கும் வர்க்கத்தின்  உரிமை காத்திட சிஐடியு நடைபயணம் வருகுது

வருகுது வருகுது உழைக்கும் வர்க்கத்தின் 
உரிமை காத்திட சிஐடியு நடைபயணம் வருகுது
                  (வருகுது...)
ஏழு திசையெங்கும் செம்மயமாய் 
செங்கொடி ஏந்திய நடைபயணம் 
மேத்திங்கள் முப்பது திருச்சி நகருக்கு 
அன்போடு அழைக்குது வா தோழா 
இழந்ததை மீட்க உரிமையை காக்க 
உழைப்போர் பயணம் வருகுது பார் சிறு 
குறு தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து 
செய்திட முழங்கிடவே
                    (வருகுது...)
பாசிச பாஜக அரசாங்கம் ஆட்சி நடத்துவது 
அராஜகம் பெரும் முதலாளிக்கு 
துணையாக கண்ணில் பூசுது 
வெண்சாமரம் உழைக்கும் தொழிலாளர் 
விரோத சட்டத்தை ரத்து செய்திட குரல் 
கொடுத்து-பழைய
பென்சன் திட்டங்கள் கிடைத்திடவே 
முழக்கமிட்டு
                   (வருகுது...)
சிக்காக்கோ வீதியில் சிந்திய ரத்தம் ஈரம் 
இன்னும் காயலயே காவி கயவர்கள் 
தொழிலாளர் உரிமையை முடக்கம் 
செய்வது வன்முறையே நிரந்தர 
பணிகளில் காண்ட்ராக்ட் முறையை 
தடுத்திடவே அரசாணை எண் 115-ஐ 
ரத்து செய்திட அணிவகுப்போம்
                   (வருகுது...)
பாடல் : எம்.ரமேஷ், 
தியாகி என்வி கலைக்குழு, தஞ்சை.