tamilnadu

img

‘ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’ : விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” என்ற தலைப்பில், தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்கு, திங்களன்று பாராட்டு விழா நடைபெற்றது.  இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, டாக்டர் கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. ராஜராஜன், எம். சங்கரன், ஆசீர் பாக்கியராஜ்,  டாக்டர் எம். வனிதா, டாக்டர் நிகார் ஷாஜி, டாக்டர் வீரமுத்துவேல் ஆகிய சாதனை விஞ்ஞானிகளைப் பாராட்டி உரையாற்றினார். ரூ. 25 லட்சம் பரிசும் அறிவித்தார்.