tamilnadu

img

போலீஸ் அகாடமி அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை, ஜூன் 1-  போலீஸ் அகாடமி அதிகாரி செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.இதில் விசார ணைக்குப் பின்னர் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிடம் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவது குறித்து செல்வநாகரத்தினம் ஐபி எஸ் பேசியுள்ளார். பின்னர் காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக  துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.   சில மாதங்கள் கழித்து அவருக்கு திருமணமானது அப்பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், செல்வநாகரத்தினத்திடம் கேட்டுள்ளார். சுட்டுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து  அப்பெண் உடனான தொடர்பை செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் துண்டித்துள்ளார்.

இந்நிலையில் 2022 இல்  அப்பெண் இ-மெயில் மூலமாக  தமிழ்நாடு போலீஸ் அகாடமி தலைவருக்கு புகார் அளித்துள்ளார்.  இந்த புகார்  டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அனுப்பப்பட்டு, சிபிசிஐடி முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப் பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின் அவர் மீது  துறைரீதியான ஒழுங்கு  நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை பலர் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெற அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பெண்  தலைமறைவாக இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் மீதான புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தியது.இதன் முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி  தாக்கல் செய்யவுள்ளார்.  2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மாநாட்டுப் பேரணியில் கட்சி யினரை  உருட்டுக்கட்டை கொண்டு தாக்கி, பேரணியை சீர்குலைக்க முயற்சித்தவர் இந்த செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.