tamilnadu

img

கூலி தொழிலாளி மீது கொடூரத் தாக்குதல்: பென்னாகரம் அருகே வனத்துறையினர் அராஜகம்

தருமபுரி, செப்.4- பென்னாகரம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய வனத்துறையின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து செப்.9 ஆம் தேதியன்று போராட்டம் நடைபெ்ற உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், பத்ரள்ளி ஊராட்சி, குழி க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அர்த்தனாரி (40). கூலி தொழிலாளி யான இவருக்கு சுதா (37) என்ற மனைவியும், 3 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில், ஆக.30 ஆம் தேதியன்று நள்ளி ரவு அர்த்தனாரி வீட்டிற்குள் நுழைந்த வனத்துறையினர், தூங்கிக்கொண்டி ருந்த அர்த்தனாரியை எழுப்பி “மறைத்து வைத்துள்ள துப்பாக்கி யைக்காட்டு” என்று கேட்டு தாக்கியுள்ளனர். இதற்கு அர்த்தனாரி “என்னிடம் துப்பாக்கி இல்லை. நான் கூலி வேலை செய்து வருகிறேன்” என கூறியுள்ளார். இதனை ஏற்காத வனத்துறையினர் அர்த்தனாரியை இழுத்து சென்ற னர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி சுதாவை கீழே தள்ளியுள்ளனர். அவரது குழந் தைகள் தடுத்துள்ளனர். தடுத்த குழ ந்தைகளை வனத்துறையினர் கொடூ ரமாக தூக்கி வீசினர். இதில், குழந்தை கள் ‌ஹரிஷ்குமார், அருள் குமார் இரு வரும் படுகாயமடைந்தனர்.

மேலும், வனத்துறையிரை தடுக்க முயன்ற குடும்பத்தினர் அனை வரையும் கொடூரமாக தாக்கி விட்டு அர்த்தனாரியை சின்னம் பள்ளியில் உள்ள வனத்துறை அலுவ லகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அர்த்தனாரியை லத்தியால் கால்பாதம் மற்றும் அடிவயிற்றில் கடுமையாக தாக்கி, பல மணி நேரம் கொடூரமாகச் சித்ரவதை செய்து ள்ளனர். இதன்பின், சின்னம்பள்ளி யிலிருந்து தருமபுரி மாவட்ட வன அலுவலகத்திற்கு கொண்டு சென்று, காட்டில் வேட்டையாடியதாகக்கூறி ரூ.15 ஆயிரம் அபராதம் வசூ லித்துவிட்டு, அர்த்தனாரியை வனத் துறை விடுவித்தனர். இதனிடையே வனத்துறையினர் கடுமையாக தாக்கியதில், அவரது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டது. அவரது மனைவி சுதாவை தாக்கி மான பங்கம் செய்துள்ளனர். குழந்தைகள் ஹரிஷ்குமார், அருள் குமார் ஆகி யோரை வனத்துறையினர் தூக்கி வீசியதில்‌ தலை மற்றும் கண்ணத் தில் காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவர்களை உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இந்நிலையில், அர்த்தனாரி குடும்பத்தினரை மருத்துவமனை யில் நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், இரா.சிசுபாலன், வே.விசு வநாதன், சின்னம்பள்ளி பகுதி செயலாளர் சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் குமார், ஆ.ஜீவா னந்தம் ஆகியோர் நடத்த சம்ப வத்தை நேரில் கேட்டறிந்தனர். மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அர்த்தனாரி குடும்பத்திற்கு ஆறு தல் தெரிவித்தனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், அர்த்த னாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வனத்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட கொலை வெறியர்கள் ஆலயமணி உள்ளிட்ட குழுவினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும். வனத்துறை அதிகாரி களின் கொடூர தாக்குதல் நடவடிக் கையைக் கண்டித்து  செப்.9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பென்னா கரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, என்றனர்.
 

;