tamilnadu

img

ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் பாஜக அரசு

கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய  விளையாட்டு -இளைஞர் நலத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் ஒன்றிய பாஜக அரசு என்பதற்கு சான்றாக உள்ளது. விளையாட்டுத் துறையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கி இருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பாஜகவின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன்- விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  எக்ஸ் தளம் பதிவில்  தெவித்துள்ளார்.