ஈரோடு, டிச.1- கோபிசெட்டிபாளையம் அருகே தலித் இளைஞர்கள் மீதான கொலை வெறித் தாக்குதலை கண்டித்தும், அதில் தொடர்புடைய சாதி ஆதிக்க வாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க் சிஸ்ட் கட்சியினரை காவல் துறையி னர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள இந்திரா நகர் குடியிருப்பைப் சேர்ந்த தலித் அருந்ததிய இளைஞர்கள் இருவர், கடந்த நவ.23 ஆம் தேதியன்று இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் வாக னத்தை நிறுத்திவிட்டு, பேசிக்கொண் டிருந்தபோது, அங்கு வந்த கண்ணுச் சாமி, சசிகுமார் ஆகியோர், சாதி ஆதிக்க வெறியுடன் தலித் இளை ஞர்களை தாக்கி, அவர்களின் வாக னத்தை பறித்துச் சென்றனர். இத னால், வீடு திரும்ப முடியாமல், தலித் இளைஞர்கள் அங்கேயே தூங் கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்த நாள் அதேபகுதிக்கு வந்த கண்ணுச்சாமி, சசிகுமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர், சாதிய வன் மத்துடன் தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி னர். மேலும், நாவறண்டு தண்ணீர் கேட்ட பாதிக்கப்பட்ட இளைஞர் கள் மீது, சிறுநீர் கழித்துள்ளனர். இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த இளைஞர்கள் அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் கண்ணுச் சாமி, சசிகுமார் உட்பட 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. ஆனால், தற்போது வரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சாதி ஆதிக்க வாதிகள், கோழி திருடியதால் தாக் கினோம் என பிரச்சனையை திசை திருப்பி போராட்ட நாடகத்தை நடத்தியுள்ளனர். இதனை கண்டித் தும், பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் களுக்கு நிவாரணம் வழங்க வேண் டும். கொலைவெறித் தாக்குதல் நடத் திய சாதி ஆதிக்கவாதிகளை உடன டியாக கைது செய்ய வேண்டும். சாதிய ஆதிக்கவாதிகளுக்கு காவல் துறை துணை போவதை கண்டித் தும், பாதிக்கப்பட்ட இளைஞர்க ளின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் வெள்ளியன்று கோபிசெட்டி பாளையம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன் தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம் கண்டன உரையாற்றினார். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செய லாளருமான கே.சாமுவேல்ராஜ், சிபிஎம் கோபி தாலுகாச் செயலா ளர் ஜி.ஏ.துரைராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர்கள் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்று ஆவேச முழக்கங்களை எழுப்பினர். அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை எனக்கூறி, ஆர்ப் பாட்டத்தை சீர்குலைக்க, மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், தொடர்ந்து போராட்டம் நடைபெற் றதால், ஆத்திரமடைந்த காவல் துறையினர், போராட்டக்காரர் களை அடாவடியாக கைது செய்த னர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. இதனிடையே தலித் இளைஞர்களை, சாதி ஆதிக்க வெறியுடன் தாக்கியவர் களை கைது செய்வதில் சுணக்கம் காட்டும் காவல் துறையினர், பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடும் மார்க்சிஸ்ட் கட்சியி னரை அடாவடியாக கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இந்த போக்கை காவல் துறை யினர் உடனடியாக கைவிட வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.