tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை என தேன் கூட்டிற்குள் கையை விடாதீர்கள்

தேசிய கல்விக் கொள்கை என தேன் கூட்டிற்குள் கையை விடாதீர்கள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் வெள்ளியன்று (பிப்.21) நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 45 ஆயிரம் பயனாளிகளுக்கு வெள்ளியன்று நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 11,716 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டா வழங்கப்பட்டது. வேளாண் பொறியியல் துறை சார்பில் 36 பயனாளிகளுக்கு பவர் டில்லர், 13 பயனாளிகளுக்கு பவர் வீடர், 1 பயனாளிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரம், 2 பயனாளிகளுக்கு உழுவை இயந்திரம், 2,121 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 516 பயனாளிகளுக்கு ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 44,690 பயனாளிகளுக்கு ரூ.387.66 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆக மொத்தம் 1476 கோடி மதிப்பீட்டிலான 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்ததுடன், ரூ.386.92 கோடி மதிப்பீட்டில் 44,689 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வரவேற்றார்.

10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதல்வர், திட்டக்குடி விருத்தாசலம் பகுதியில் வெலிங்டன் ஏரி 130 கோடி செலவில் பலப்படுத்த நடவடிக்கை, 35 கோடி மதிப்பில் கடலூர் மாநகராட்சி மேம்படுத்துதல், பண்ருட்டியில் 15 கோடி மதிப்பில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும், புவனகிரி சிதம்பரம் முட்லூர் சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை 50 கோடி மதிப்பில் மேம்பாடு,குறிஞ்சிப்பாடியில் 6 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி 63 கோடி மதிப்பில் மேம்பாடு, கடலூர் வட்டத்தில் பருவமழை வெள்ள பாதிப்பை தடுக்க தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், லட்சியவாதிக்கு கொள்கை மட்டும் தான் தெரிய வேண்டும், வெட்டிப் பேச்சுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை. என் ஒரே இலக்கு மக்கள் தான் என தெரிவித்தார்.  மேலும் நிதியை தராமல் ஒன்றிய அரசு மாநில வளர்ச்சியை தடுக்கிறது என்றும் கல்வியில் அரசியல் செய்வது நீங்களா அல்லது நாங்களா என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுத்தார். மதவெறி, சமஸ்கிருத வளர்ச்சிக்கு நிதி செலவிடுவது நீங்கள் என கடுமையாக சாடினார். சமூக நீதியை சிதைக்க தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது என குற்றம் சாட்டிய தமிழக முதல்வர் தேசிய கல்விக் கொள்கை என தேன் கூட்டிற்குள் கையை விடாதீர்கள் இது என் கடுமையான எச்சரிக்கை என தெரிவித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி,எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், , அமைச்சர்கள் கே.என். நேரு,க. பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.சிவசங்கர், சி.வே.கணேசன், மக்களவை உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா.ராஜேந்திரன், தி.வேல்முருகன், சிந்தனை செல்வன், எம்.ஆர்.ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.