tamilnadu

img

கடும் ஊனமுற்றோர் உதவித்தொகை: ஆணையரிடம் மாற்றுத்திறனாளிகள் முறையீடு

சென்னை, அக். 22 - கடும் ஊனமுற்றோர் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கேட்டு  ஒன்றரை ஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனர். இது தொடர்பாக மாற் றுத் திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரசை வெள்ளியன்று (அக்.21) தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் கே.பி.பாபு, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்.குமார் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். அதில், கடும் ஊனமுற்றோ ருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக 2 ஆயிரம் ரூபாய்  வழங்கப்படுகிறது. கடந்த 2021 ஏப்ரல் முதல் மனு செய்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் செப்டம் பர் மாதங்களில் இதற்கான நிதி ஒதுக்கி வழங்கப்படும்.

ஆனால், கடந்த 18 மாதங்களாக நிதி ஒதுக்கப் படவில்லை. இதனால் ஒவ்வொரு மாவட்டத் திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் நிதியுத விகிடைக்காமல் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து காத்திருப் போர் பட்டியலில் உள்ளவர்க ளுக்கு, நிலுவையுள்ள பராமரிப்பு தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருந்தது. இதுகுறித்து பேசிய பா.ஜான்சி ராணி, “மனுவை பெற்றுக் கொண்ட  ஆணையர், முதல் கட்டமாக 8 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது  கட்டமாக 25 ஆயிரம் பேருக்கும்  பராமரிப்பு உதவி தொகை வழங்க நிதி ஒதுக்க கோரி அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர்  முதல் வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க் கிறோம். நிதி ஒதுக்கீடு கிடைத்த தும், நிலுவையில் உள்ள அனை வருக்கும் பராமரிப்பு தொகை  வழங்கப்படும் என்று உறுதி யளித்துள்ளார். நவம்பர் முதல் வாரத்திற் குள் ஒதுக்கீடு பெற்று உதவித் தொகை வழங்காவிடில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்  என்று ஆணையரிடம் தெரிவித் துள்ளோம்” என்றார்.

;