தஞ்சாவூர், டிச.21 - தஞ்சை மாவட்டத்தில் செயல்படுகிற தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏஐடியூசி, சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை மாலை தஞ்சாவூர் தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லை வனம், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செய லாளர் கேராஜன், மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசு, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிற பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கட்டுப் படுத்த வேண்டும். நடுத்தர, ஏழை, எளிய, உழைக்கும் மக்களை அன்றாடம் பாதிக்கின்ற விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும். மின் சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மக்களுக்கு சேவை செய்கிற பொதுத் துறையை விற்று, வருவாய் பெருக்கும் தேசிய பண மயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். கட்டு மான நல வாரியங்களை முடக்கக் கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி 2022 பிப்ரவரி 23, 24 தேதி களில் நடைபெறும் நாடு தழுவிய 48 மணி நேர வேலை நிறுத்தத்தை தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெற செய்வதற்கான ஆயத்த மாநாடு, அனைத்து தொழிற்சங்கங் கள் சார்பில் டிச. 28 ஆம் தேதி தஞ்சாவூரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.