tamilnadu

img

6 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலம் எடுக்க நடவடிக்கை

சென்னை,  ஜூலை 19 - தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, தேசிய மருத்துவ ஆணை யத்திடம் இந்த ஆண்டுக்குள் விண்ணப்பி க்க இருப்பதால், தலா 22 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம் வலியுறுத்தி உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டன. இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்தது. இதுதவிர, 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயி லாடுதுறை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக தலா ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க அனு மதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசி டம் தமிழக அரசு வலியுறுத்திவருகிறது. அந்த அடிப்படையிலேயே, 6 அரசு மருத்துவக் கல்லூரிக்கான நிலத்தை கையகப்படுத்தி தருமாறு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம், மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது. நிலம் கையகப் படுத்தும் பணி முடிந்த பிறகு, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்ப தற்கான பணிகள் தொடங்கப்படும்.