சென்னை, ஜூலை 12 - பாஜகவிற்கு எதிரான மக்களின் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். மணிப்பூரில் பாஜக நடத்தி வரும் மதவெறி படுகொலைகளை தடுத்து அமைதியை கொண்டு வர வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சிகளை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 11) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இந்த போராட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் அ.சவுந்தரராசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: இந்துக்களில் பெரும்பான்மையோர் மதவெறிக்கு ஆதரவாக இல்லை. பண்டிட்டு களை காரணம் காட்டி ஜம்மு - காஷ்மீரை பாஜக துண்டாடியது. இன்றைக்கு காஷ்மீர் பண்டிட்டுகள் பாஜக-விற்கு எதிராக திரும்பி யுள்ளனர். நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான அலை உருவாகி உள்ளது. எனவே, மக்களின் எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். மணிப்பூரில் பிற கட்சிகளில் வெற்றி பெற்ற வர்களை வாங்கி பாஜக ஆட்சி நடத்துகிறது. அதிகாரத்தை தக்கவைக்க பிளவுவாத அரசியலை நடத்துகிறது. மணிப்பூர் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை முதலாளிகள் கொள்ளையடிக்க ஏதுவாக, மலைவாழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டு பாஜக கலவரங் களை நடத்துகிறது.
சிறுபான்மை மக்களின் வீடு, கடை உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடிக் கின்றனர். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியவர்களை வைத்து ஆட்சியை நடத்து கிறார்கள். 2 மாதங்களாக நீடிக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த இயலாத பாஜக அரசு வெளியேற வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறி, மாநில அரசை கலைக்க ஆளுநர் முயற்சிக்கிறார். நாட்டை ஆளுவதற்கு அருகதையற்றவராக பிரதமர் மோடி உள்ளார். இந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்ப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார். அரசு பயங்கரவாதம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில், மணிப்பூரில் சிறுபான்மை கிறிஸ்துவர்களுக்கு எதிராக பாஜக அரசு பயங்கரவாதத்தை கட்ட விழ்த்து விட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்துள்ளது. தேவாலயங்கள் நொறுக் கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரங்களை இழந்துள்ள னர். 2002 குஜராத் கலவரத்தை விட மோசமாக மணிப்பூரில் நடக்கிறது என்றார். தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக மக்களை திசை திருப்ப பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. நாட்டில் 98 விழுக்காடு மக்களுக்கு பொது வான சட்டம்தான் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா பன்மைத்துவத்தை காப்போம் என்றும் அவர் கூறினார். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் திமுக பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, காங்கிரஸ் கட்சி நிர்வாகி உ.பலராமன், மில்லி கவுன்சில் உறுப்பினர் இப்னுசவுத், அருட்தந்தை எம்.சி.ராஜன், எஸ்.குமார், சுயாட்சி இந்தியா அமைப்பை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பேசினர்.