இரத்தப் பரிசோதனை மூலம் ஒருவரின் உறுப்புகளுக்கு உயிரியல்ரீதியாக வயதா வதைக் கண்டுபிடித்தால் நோய்வாய்ப்படு வதற்கு முன்பே அவருடைய நோயைத் தீர்ப்ப தற்கான சிகிச்சையை தொடங்கமுடியும். அல் சைமர்ஸ் (Alzheimer’s) போன்ற நோய்கள் வருங் காலத்தில் அவருக்கு ஏற்படுவதை முன்கூட் டியே கணிக்கமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவரின் உறுப்புகள் அவரு டைய உடலை விடவேகமாக முதுமையடைவ தால் குறிப்பிட்ட அந்த உறுப்பில் 15 ஆண்டு களில் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்ட றியப்பட்டுள்ளது.
இயந்திரக்கற்றல் தொழில்நுட்பம்
கலிபோர்னியா ஸ்ட்ரான்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் தலைமையில் நடந்த இந்த ஆய்வு இயந்திரக்கற்றல் (meachine learning) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப் பட்டது. இதில் மனித இரத்தத்தில் உள்ள புரத அளவு மதிப்பிடப்பட்டு ஆராயப்பட்டது. இந்த ஆய்வுகள் மூளை, இதயம், நுரையீரல்கள், சிறுநீர கம், கல்லீரல், பித்தப்பை, குடல், நோய் எதிர்ப்பாற் றல், திசுக்கள், கொழுப்பு, ரத்த நாளங்கள் (வாஸ்குலர்) உள்ளிட்ட 11 உறுப்புகள், உறுப்பு மண்டலங்களை மையமாகக் கொண்டு நடத்தப் பட்டன. உறுப்புகளின் படிமுறை உருவாக்கத்தைப் (algorithm) பயன்படுத்தி வாஷிங்டன் நைட்ஸ் அல்சைமர்ஸ் நோய் ஆராய்ச்சி மையத்தில் 20 முதல் 90 வயது வரை ஆரோக்கியமாக இருக்கும் 1398 பேரின் இரத்தத்தில் இருந்த ஐயாயிரம் வகை புரதங்கள் பரிசோதிக்கப்பட்டன. ஆய் வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் நடுத்தரவயதினர் அல்லது வாழ்வில் முதுமை யை அடைந்துகொண்டிருப்பவர்கள். மற்ற உறுப்புகளை விட ஆய்வு செய்யப்பட்ட உறுப்புகளின் மரபணுக்கள் நான்கு மடங்கு கூடுத லாகத் தூண்டப்பட்டு ஆராயப்பட்டன. 858 உறுப்பு புரதங்களின் படிமுறை உருவாக்கம் ஆராயப் பட்டு உறுப்புகளின் வயது தீர்மானிக்கப்பட்டது. “இதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு வரின் உடல் உறுப்பின் உயிரியல்ரீதியிலான வயதை மதிப்பிடமுடியும். இதன் மூலம் அந்த உறுப்பிற்கு வருங்காலத் தில் ஏற்படக்கூடிய நோய்களை அறியமுடியும்” என்று ஸ்ட்ரான்போர்டு பல்கலைக்கழக டிஹெச் சென் II (DH Chen ii) நரம்பியல் துறைப் பேராசி ரியர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசி ரியர் டோனி விஸ்கோரே (Tony Wyss-Coray) கூறு கிறார். ஐந்து வெவ்வேறு பிரிவுகளை (cohorts) சேர்ந்த 5,670 பேரின் படிமுறை உருவாக்கத்தை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். 20 சதவீத நோயாளி களில் ஒரு உறுப்பு தீவிரமாக முதுமையடைவது தெரியவந்தது. 1.7 பேரில் ஒன்றிற்கும் மேற்பட்ட உறுப்புகள் முதுமையடைவது கண்டுபிடிக்கப்பட்டது என்று நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட் டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. பல்வேறு காரணங்களால் வேகமாக தூண்டப்படுவதன் காரணமாக முதுமையடையும் உறுப்புகளில் உண் டாகும் நோய்களால் 20 முதல் 50 சதவீத நோயா ளிகளில் உயிரிழப்பிற்கான வாய்ப்பு கூடுதலாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
உறுப்புகளின் வயது
இதயத்திற்கு வேகமாக வயதாகும் நிலை யில் உள்ளவர்களில் மற்றவர்களை விட 250 சத வீத கூடுதலாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வேகமாக முதுமையடையும் மூளை மற்றும் வாஸ்குலர் திசுக்கள் உள்ளவர்கள் அல்சைமர்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை இப் போதுள்ள இரத்த உயிரிக்காட்டிப் பரிசோதனை யைவிட இந்தப் பரிசோதனை மூலம் சுலப மாகக் கண்டுபிடிக்கமுடியும். இந்த புதிய கண்டு பிடிப்பை பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தமுடியும். இதன் மூலம் வருவதற்கு முன்பே மனி தர்களின் உடல் உறுப்புகள் வயதாவதை அறிந்து நோய் வராமல் தடுக்க உதவும் சிகிச்சையை மேற்கொள்ளமுடியும்.” அறிகுறிகள் தோன்று வதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஒரு வரின் உடலில் டிமென்சியா நோய் உருவாக லாம். இப்போதுள்ள புதிய சிகிச்சைமுறைகள் அல்சைமர்ஸ் நோயின் ஆரம்பநிலையிலேயே அதைக் கண்டறிய உதவுகின்றன. தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிய உதவும் இது போன்ற சுலபமான பரிசோதனைகள் நோய் வராமல் தடுக்க பெரிதும் உதவும். மனித உட லிற்குள் மூளை போன்ற உறுப்புகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய இரத்தம் ஒரு சாளர மாகப் பயன்படுவதை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. இரத்தத்தில் இருக்கும் உயிரிக் காட்டிகள் மூளை, இரத்தக்குழாய்களுக்கு வயதா வதை அறிய உதவுகின்றன. இது அல்சைமர்ஸ் போன்ற நோய்களின் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ள பயன்படும். மருத்துவத்துறையின் இந்த புதிய ஆய்வுப் பிரிவு இப்போது ஆரம்பநிலையில் உள்ளது. இது இரத்தத்தை ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தி, வரும் முன்பே நோய்களைக் கண்ட றிய உதவும். வரும் ஐந்தாண்டுகளுக்குள் யுகே தேசிய சுகாதாரச்சேவைகளில் (NHS) அல்சை மர்ஸ் நோயைக் கண்டறிய உதவும் முதல் இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” என்று யுகே அல்சைமர்ஸ் ஆய்வு அமைப்பின் தலைவர் டாக்டர் லீ மெர்சலீன் (Dr Leah Mursaleen) கூறு கிறார். அல்சைமர்ஸ், டிமென்சியா போன்ற முதுமை தொடர்பான நோய்களின் அறிகுறிகள், அவை தீவிரமடைதலை முன்கூட்டியே கண்டறிய மேலும் துல்லியமான, சுலபமான முறைகள் கண்டுபிடிக் கப்படும்போது இவற்றை விரைவாக குணப் படுத்தும் காலம் விரைவில் வரும் என்று ஆய்வா ளர்கள் நம்புகின்றனர்.