tamilnadu

img

ரூ.600 கோடியில் டைடல் பூங்கா மதுரையில் அமைகிறது: முதல்வர் அறிவிப்பு

முதல்வருக்கு நன்றி தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரையில் புதிய டைடல் பார்க் ரூ.600 கோடி ஒதுக்கீடு  செய்து அறிவித்த தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது. இதற்காக ஜனவரி 19 ஆம் தேதி தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வரை நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். இன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாட்டில் விழா பேருரையாற்றிய முதல்வர், டைடல் மற்றும் மதுரை மாநக ராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்.

மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா அமையும். முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று அறிவித்துள்ளார். மதுரை மற்றும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது. மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உருவம் கொடுத்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த தகவல்தொழில்நுட்ப பூங்கா தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மதுரை, செப் 16- மதுரையில் ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில் ஐந்து ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என்று மதுரையில் நடைபெற்ற சிறு,  குறு மற்றும் நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள் தெற்கு மண்டல  மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற பெயரில் தெற்கு மண்டல மாநாடு மதுரை அழ கர்கோவில் சாலையில் உள்ள கோர்டியார்ட்  விடுதியில் செப்டம் பர் 16 வெள்ளியன்று நடைபெற்றது. இதில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறு சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும்  அமைச்சர்கள் பி.மூர்த்தி, முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி, அ.வெங்கடேசன் , மு.பூமிநாதன், மேயர் வ. இந்திராணி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய லாளர்  காகர்லா உஷா, வணிக வரி  மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய் உள்ளிட்ட அனைத்து  தொழில் முனைவோர் அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனங்களின் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மதுரை சுங்கடி சேலைகள், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், மதுரை  அப்பளம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. தமிழ்நாட்டின்  தனித்தன்மையான பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக,  புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட் களில் 18 பொருட்கள் தென்தமிழ்நா ட்டைச் சார்ந்தவை.  புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள 25 வகையான பொருட்களில், கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி பனங்கற்கண்டு, தூத்துக்குடி மக்ரூன், சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது பெருமைக்குரிய ஒன்று. இப்பொருட்களுக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது என்கிற காரணத்தால், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதி யாளர்களும் அதிக அளவில் தயா ரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்!

குழுமங்களுக்கு  பொதுவசதி மையம் 

தற்போது, மதுரை மாவட்டம் விளாச்சேரி பொம்மைக் குழுமம், தூத்துக்குடி ஆகாயத் தாமரைக் குழுமம், விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையம் மகளிர் நெசவுக் குழுமம் ஆகிய குழுமங்கள் ரூ.9 கோடியே 5 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.9  கோடியே 82 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டு மல்லாமல்,காஞ்சிபுரம் நரிக்குறவர் பாசிமணி குழுமம், திரு நெல்வேலியில் சமையல் பாத்திரக் குழுமம், திருப்பத்தூரில் ஊதுபத்திக் குழுமம், சேலம் மாவட்டம் தம்மம் பட்டியில் மரச்சிற்பக் குழுமம், கிரு ஷ்ணகிரியில் மூலப்பொருட்கள் கிடங்கு குழுமம், ஈரோட்டில் மஞ்சள் தூள் உற்பத்திசெய்யும் குறுந்தொ ழில் குழுமம், ஈரோடு மாவட்டம், பவா னியில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி  மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயம்புத்தூரில், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம்  தொடங்கி வைக்கப் பட்டது. இதன் மூலம் மேற்கு மாவட்டங் கள் மட்டுமல்லாமல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலுள்ள கயிறு தொழில் நிறுவனங்கள் பயனடை யும் என்பதைத் தெரிவித்துக்கொள் கிறேன்.

தொழில் புரிதல் பட்டியலில் முன்னேற்றம்

நாட்டில் எளிமையாக தொழில் புரிதல் பட்டியலில் தமிழ்நாடு 14-ஆ வது இடத்தில் இருந்து, இப்போது 3-ஆவது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது. அடுத்து முதல் இட த்தைப் பிடிப்பதே நமது இலக்கு. அதேபோல், ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல் பாடுகளுக்கான ‘லீடர்’ அங்கீ காரத்தைத் தற்போது பெற்று இருக்கிறது. தமிழ்நாட்டை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொரு ளாதாரமாக மாற்றிட வேண்டும் என்கின்ற இலக்கை அடைய, ஏற்று மதி வர்த்தகம் முக்கியமாகும். எனவே  ஏற்றுமதியை ஊக்குவித்து வரு கிறோம்.  சொத்தின் மீது கூடுதல் கடன் பெற பதிய தேவை இல்லை தொழில் முனைவோர்கள் சொத்து  பிணையம் கொடுத்து கடன் பெறும் போது, சொத்தின் மீது கடன் பெற்றுள் ளதை உரிமைப்பத்திரம் ஒப்ப டைத்து  தலைப்புப் பத்திரத்தின் வைப்புச் சீட்டு சார் பதிவாளர் அலு வலகத்தில் பதிவு செய்கின்றனர். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு  செய்ய வேண்டிய முறை தற்பொ ழுது நடைமுறையில் உள்ளது. ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன் கடன் பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடை முறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது பதிவு செய்யத் தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும். 

சொத்தின் மீது கூடுதல் கடன் பெற பதிய தேவை இல்லை

தொழில் முனைவோர்கள் சொத்து  பிணையம் கொடுத்து கடன் பெறும் போது, சொத்தின் மீது கடன் பெற்றுள் ளதை உரிமைப்பத்திரம் ஒப்ப டைத்து  தலைப்புப் பத்திரத்தின் வைப்புச் சீட்டு சார் பதிவாளர் அலு வலகத்தில் பதிவு செய்கின்றனர். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு  செய்ய வேண்டிய முறை தற்பொ ழுது நடைமுறையில் உள்ளது. ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன் கடன் பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடை முறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது பதிவு செய்யத் தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும். 

டைடல் பூங்கா

இத்துடன் இந்த மாநாடு நடை பெறும் மதுரையை மையப்படுத்தி, மற்றொரு மகிழ்ச்சியான அறிவிப்பை யும் வெளியிடுகிறேன். தகவல் தொழில்நுட்பம் மற்றும் FINTECH போன்ற அறிவு சார்ந்த தொழில் களுக்கான முக்கிய மையமாக மது ரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணை ந்து SPB மூலம் ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படவுள் ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால், இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத் தாவணி யில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், ஐந்து ஏக்கரில் இது அமைக்கப்படும்.  இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில்  இரட்டிப்பாக்கப்படும். இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் FINTECH மற்றும் தகவல் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதி களை வழங்குவதுடன் மதுரை மண்ட லத்தின் பொருளாதார வளர்ச்சி க்கும், அது வழி வகுக்கும். முதல் கட்ட த்தில், 10 ஆயிரம் பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
 

;