tamilnadu

எம்பிபிஎஸ் படிப்புக்கு 2 நாளில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை,டிச.21- தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒரு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியும், 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வரு கின்றன. இது தவிர இந்த ஆண்டு விவேகா னந்தா மற்றும் அருணை ஆகிய 2 தனி யார் மருத்துவக் கல்லூரிகளும் புதிதாக திறக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு தொடங்கி உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து அதனை நேரடியாகவும், தபால் மூலமாகவும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி  இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பப்படு கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 2,695 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரையில் 2,075 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை சமர்ப்பித்துள்ளனர். இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 1,400  பேரும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 675 பேரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். விண்ணப்பம் பெறுவதற்கு ஜனவரி 7ஆம்  தேதி கடைசி நாளாகும். கீழ்ப்பாக் கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கு னர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறு வதற்காக பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் விண்ணப்ப படிவங் களை செலுத்தி வருகிறார்கள்.

;