புவனேஸ்வரம் வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக மாறி டாணா என்ற பேரில் புயலாக (கத்தார் நாட்டின் பெயர்) வலுப்பெற்றது. இந்த டாணா புயல் வெள்ளியன்று அதிகாலை ஒடிசா மாநிலத்தின் பிடர்கனிகா தேசிய பூங்கா - தாம்ரா துறைமுகம் இடையே வனப்பகுதியில் 120 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரை யை கடந்தது. டாணா புயல் ஒடிசா வில் கரையை கடந்தாலும், அம்மாநி லத்தை போன்று மேற்கு வங்க மாநி லத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் அதீத அளவில் கனமழை பெய்தது. அதே போல் ஜார்க்கண்டின் ஒருசில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், டாணா புயல் மற்றும் கனமழை காரணமாக ஒடிசா வில் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவி லான பயிர்கள் சேதமடைந்துள்ள தாகவும், 2.80 லட்சம் ஏக்கர் பரப்பு நீரில் மூழ்கியுள்ளதாகவும் ஒடிசா வேளாண்மை மற்றும் விவசாயி களுக்கான அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலாளர் அரபிந்தா பதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறு கையில்,”முதல்கட்ட அறிக்கை யின் படி, டாணா புயலால் 1,75,000 ஏக்கர் (69,995 ஹெக்டேர்) பரப்பள விலான பயிர்கள் சேதமடைந்துள் ளன. கண்பார்வைக்கு தெரியும் அளவில் மதிப்பீடு செய்யப்பட்ட தில் 2,80,000 ஏக்கர் (1,12,310 ஹெக் டேர்) நீரில் மூழ்கியுள்ளன. மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் குழு அணுகுமுறையில் மாவட்ட வரு வாய் அதிகாரிகளுடன் இணைந்து பயிர் இழப்பினை(33 சதவீதம் மற்றும் அதற்கு மேல்) கணக்கிடு மாறு வேளாண்துறைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்” என அவர் கூறினார்.
மேற்குவங்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் டாணா புயலுக்கு மேலும் 2 பேர் உயிரி ழந்துள்ளனர். ஏற்கெனவே தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் பதர்பிரதிமா மாவட்டங்களில் தலா ஒருவர் என 2 பேர் உயிரிழந்த னர். தொடர்ந்து புர்பா பர்தமான் மற்றும் ஹவுரா மாவட்டங்களில் தன் னார்வலர் உட்பட 2 பேரின் சடலம் மழைநீரில் இருந்து மீட்கப் பட்டுள்ளது. இதன்மூலம் டாணா புயலுக்கு மேற்குவங்கத்தில் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.