தருமபுரி, அக்.30- காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியுள்ளது. அணைக்கு திங்களன்று விநாடிக்கு 20,255 கனஅடியாக இருந்த நீர்வரத்து செவ்வாயன்று 14,273 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 2,500 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 108.22 அடியாகவும், நீர் இருப்பு 75.90 டிஎம்சியாகவும் இருந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்களன்று 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து செவ்வாயன்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.