tamilnadu

img

பாஜக செய்யத் தவறியதற்கும் நேரு, இந்திரா பொறுப்பாக முடியுமா?

மும்பை:
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளுக்கும், நேரு, இந்திரா காந்திதான் காரணமா? என்று சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

எதற்கெடுத்தாலும் நேருவையும், இந்திரா காந்தியையும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 
இதுதொடர்பாக ‘சாம்னா’ தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வழங்குவதற்கு பாஜக தவறிவிட்டது. இதற்காக முந்தைய பிரதமர் நேருவையோ, இந்திராகாந்தியையோ இன்றைய மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள் குறைசொல்ல முடியாது. 

வேலையில்லாத் திண்டாட்டத் தையோ, மந்தமான பொருளாதார வளர்ச்சியையோ ஜாலங்களால் எதிர்கொள்ள முடியாது. பொருளாதார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் 5.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. விவசாயத்துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் பாஜக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது.அரசின் புள்ளிவிவரப்படியோ, கடந்த 5 மாதங்களில் மட்டும் மராத்வாடா மண்டலத்தில் 315 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியத்துறையான விவசாயத்தை கவனிக்கத் தவறிவிட்டது. இதனால், நாடு முழுவதும் விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது.

விவாதங்களில் வார்த்தைப் பிரயோகம் செய்வதாலோ, விளம்பரங்கள் கொடுப்பதாலோ, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத் திற்கு தீர்வு ஏற்படுத்திவிட முடியாது. உற்சாகம் இழந்து நிற்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, புதிதாக பொறுப்பேற்றுள்ள நிதியமைச் சர்தான் வழி கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு சாம்னா குறிப்பிட்டு உள்ளது.

;