tamilnadu

img

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமே : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

புதுதில்லி,ஆக.06-  ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீத மாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரி வித்துள்ளார்.  தில்லியில் வியாழ னன்று ரிசர்வ் வங்கி ஆளு நர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர் களிடம் கூறுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக் கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 4  சதவீதமாகவே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.3 சதவீத மாகவே தொடரும் என்றார். வங்கி களுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு, வாக னங்களுக்கான  கடன் வட்டி விகி தத்திலும் மாற்றம் இருக்காது.