tamilnadu

img

குடியரசுத் தலைவருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் 156 பேர் கடிதம் ராணுவம் குறித்து மோடி பேசக் கூடாது!

புதுதில்லி, ஏப்.12-முப்படையினர் பெற்றுள்ள வெற்றிகளை, அரசியல் கட்சிகள் தங்களின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவவீரர்கள் 156 பேர், இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசரக் கடிதம் எழுதி உள்ளனர்.இந்திய ராணுவத்தின் மதச்சார்பற்ற மாண்பும், அரசியல் சார்பற்றவிழுமியமும் பேணிப் பாதுகாக்கப் படுவதை உத்தரவாதப்படுத்த, குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்திய ராணுவத்தினரின் அர்ப்பணிப்பு மிக்க பணியை, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே, தங்களின் தனிப்பட்ட தேர்தல் ஆதாயத்திற்காக பயன் படுத்தி வருகின்றனர்.புல்வாமா தாக்குதலில் 44 சிஆர் பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக, இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலை, பாஜக என்ற கட்சியின் தனிப்பட்ட சாதனை போல சித்தரித்து வருகின்றனர்.தில்லியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பேரணியில், அம் மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, ராணுவ உடையிலேயே சென்று பாஜக-வுக்கு வாக்கு சேகரித்தார்.


பிரதமர் மோடி, தான் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் 44 சிஆர்பிஎப் வீரர்களின் புகைப்படங்களையும் போட்டு, பகிரங்கமாக வாக்கு கேட்டார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளைக் கூறி, அரசியல் கட்சிகள்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடற்படையின் முன்னாள் தளபதிஎல். ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.“குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ, மதத்திற்கோ சார்பானவர்கள் அல்ல என்பதில் பெருமை கொண்டிருப்பவர்கள்தான், இந்திய ராணுவத்தினர். அப்படிப்பட்டவர்களை ஒரு சில அரசியல் கட்சிகள் கொச்சைப்படுத்துகின்றன” என்று ராம்தாஸ் குற்றம் சாட்டினார்.இதையடுத்து, தேர்தல் ஆணையமும், ராணுவத்தினரின் சீருடைகள், புகைப்படங்கள், செயல்பாடுகளை, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதற்குத் தடைவிதித்தது. ஆனாலும் பாஜகவினர் தற் போது வரை தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. நாட்டைக் காக்க,ராணுவத்தினரைக் காக்க என்னை விட்டால் ஆளில்லை என்று பிரதமரே தொடர்ந்து பேசி வருகிறார்.


அண்மையில், பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த போது “நான் ஒரு விஷயம்தான் கூற விரும்புகிறேன்; அது என்னவென்றால், முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்களின் வாக்குகளை பாலக்கோட் தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங் கள்; அங்கு தாக்குதல் நடத்திய நம் படைக்காக உங்கள் வாக்குகளை அளியுங்கள்; புல்வாமாவில் இறந்த நமது வீரர்களுக்காக உங்கள் வாக்குகளை சமர்ப்பணம் செய்யுங்கள்” என்றார்.தில்லியில் தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர்ஆதித்யநாத், “பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் கட்சி பிரியாணி கொடுத்தது; அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் மோடியின் சேனையான இந்தியராணுவம் அப்படி இல்லை; மோடியின் சேனை அவர்களுக்கு குண்டுகளையும், தோட்டாக்களையும் அளித்தது; மோடியின் சேனை பயங்கரவாத முகாம்களை அழித் தது” என்று ஒட்டுமொத்த நாட்டின் ராணுவத்தையும், மோடியின் தனிப்பட்ட சேனையாக மாற்றினார்.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டாலும், தற்போதுள்ள சுனில் அரோரா தலைமையிலான தேர்தல்ஆணையம் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுப்பதாக இல்லை.


நோட்டீஸ் என்ற பெயரில் கண்துடைப்பாக கடிதங்களை மட்டுமேதற்போது வரை அனுப்பி வருகிறது.இந்நிலையில்தான், முப்படையினர் பெற்றுள்ள வெற்றிகளை, அரசியல் கட்சிகள் தங்களின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் 150 பேர், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அவசரக் கடிதம் எழுதி உள்ளனர்.முன்னாள் ராணுவ தளபதிகளான ஜெனரல் சுனித் பிரான்சிஸ் ரோட்ரிக்ஸ், ஜெனரல் ஷெங்கர் ராய் சவுத்திரி, ஜெனரல் தீபக் கபூர்,கடற்படை முன்னாள் தளபதிகள்அட்மிரல் லட்சுமி நாராயணன் ராமதாஸ், அட்மிரல் விஷ்ணு பகவத், அட்மிரல் அருண் பிரகாஷ், அட்மிரல் சுரேஷ் மேத்தா உள்ளிட்ட 156 பேர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களின் குழுவில் இருந்து எங்களின் உச்ச தளபதிக்கு.. என்று தலைப்பிட்டு, கடிதத்தை துவங்கியுள்ள இவர்கள், கடிதத்தில் தொடர்ந்து கூறியிருப்பதாவது:“அனைத்து அரசியல் கட்சிகளும் நம் நாட்டின் ராணுவத்தினரை, ராணுவத்தினரின் சீருடைகளை அல்லது அடையாளங்களைத் தங்கள் தேர்தல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை வலியுறுத்துகிறோம்.


எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மீது ராணுவம் மேற் கொண்ட நடவடிக்கைகளை, அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சொந்தம்கொண்டாடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத நடைமுறை என்பதுடன், வழக்கத்திற்கு மீறிய ஒன்றுமாகும்.அதேபோல் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் நம் நாட்டின் ராணுவத்தை மோடியின் சேனைஎன்று விளித்திருக்கிறார். இதுவும்ஏற்கப்பட முடியாத ஒன்று. இவ்வாறு முப்படையினரின் வெற்றிகளைத் தங்களுடையதுபோன்று துஷ்பிரயோகம் செய்வது, ராணுவச் சீருடையில் போராடுகின்ற ஆண்-பெண் அனைவரின் சண்டையிடும் திறமையையும் தார்மீக பலத்தையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே நம் ராணுவத்தினரின்மதச்சார்பற்ற மாண்பினையும் அரசியல் சார்பற்ற விழுமியத்தையும் பேணிப்பாதுகாப்பதை தாங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ”இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் முன் னாள் தளபதிகள், அதிகாரிகள் எனநூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு,குடியரசுத் தலைவருக்கு இவ்வாறு கடிதம் எழுதியது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

(ந.நி.)

;