திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

அடக்குமுறைக்காகவே உலக அளவில் பிரபலமான மோடி... 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு குற்றப்பத்திரிகை வாசித்த அமெரிக்காவின் டைம் பத்திரிகை...

புதுதில்லி:
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக் காகவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஉலக அளவில் அதிகம் பேசப்படும் நபராகமாறியிருப்பதாக அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை கூறியுள்ளது.

‘2020-ஆம் ஆண்டு உலகில் அதிகம் பேசப்பட்ட 100 பேர்’ என்ற பட்டியலை, அமெரிக்காவின் ‘டைம்’ இதழ் புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இதில், வழக்கம்போல பிரதமர் நரேந்திர மோடி, அரசியல்தலைவர்கள் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தியாவிலிருந்து பிரதமர் மோடி மட்டுமன்றி, மத்திய அரசின் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் போராடிய 82 வயது மூதாட்டி பில்கிஸ்தாடி, பேராசிரியர் ரவீந்திர குப்தா, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா என மொத்தம் 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.எனினும், ‘டைம்’ இதழின் ‘மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலில் பிரதமர்மோடி தொடர்ச்சியான பெயராக இருந்து வருகிறார். மேலும் 2014-இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, (2014, 2015, 2017 மற்றும் 2020) நான்குமுறை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதற்கு முன் 2012-இல், அவர் குஜராத்தின்முதல்வராக இருந்தபோதும் பட்டியலில் இடம்பெற்றார்.இந்த விஷயத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் ஆகியோருக்கு இணையான செல்வாக்கை மோடி பெற்றுள்ளார்.

ஒருபுறத்தில் இது பெருமைபோல் தோன்றினாலும், நரேந்திர மோடியின் பெயர் இந்தமுறை உலக அளவில் பேசப்பட்டதற்கு, இந்திய முஸ்லிம்கள் மீதானஅவரின் அடக்குமுறையே காரணம் என்று‘டைம்’ குற்றப்பத்திரிகை வாசித்திருப் பது, பிரதமர் மோடிக்கு பெருத்த அவமானகரமான பாராட்டாக அமைந்துள்ளது. பாஜகவினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.இந்தியப் பிரதமர் மோடி எந்த அடிப்படையில் பிரபலமாக விளங்குகிறார் என்பதைப் பற்றிய குறிப்பை ‘டைம்’ பத்திரிகையின் ஆசிரியர் கார்ல் விக் எழுதியுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

“ஜனநாயகத்தின் திறவுகோல் உண் மையில் சுதந்திரமான தேர்தல்கள் அல்ல.யார் அதிக வாக்குகளைப் பெற்றார்கள்என்பதை மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள். அதைவிட முக்கியமானது, வெற்றியாளருக்கு வாக்களிக்காதவர்களின் உரிமைகளுக்கு என்ன மதிப்பு அளிக்கப் படுகிறது என்பதுதான்.ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்து வருகிறது 1.3 பில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பிற மதப் பிரிவினர் உள்ளனர். அனைவரும் இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். தலாய் லாமா (தனதுவாழ்நாளின் பெரும்பகுதியை அங்கேஅடைக்கலம் கழித்தவர்) நல்லிணக்கத் திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால், “நரேந்திர மோடி அதையெல்லாம் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். ஏறக்குறைய இந்தியாவின் பிரதமர்கள் அனைவருமே இந்து மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவிகித மக்களிடமிருந்துதான் வந்துள்ளனர். என்றாலும், மோடி மட்டுமே இந்து மதத்தின் காவலர் போலவும், அவர் ஒருவர்தான் இந்து மதத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் போலவும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார். மாற்று மதத்தினர் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது மோடிஅடக்குமுறை செய்கிறார்; இதன் காரணமாகவே இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்டநபராக மோடி திகழ்கிறார்.முதலில் அதிகாரமளித்தல் என்ற ஜனரஞ்சக வாக்குறுதியின் பேரில்தான் மோடிதேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரதுஇந்து-தேசியவாத பாஜக கட்சி பன்முகத்தன்மையையும் அடியோடு நிராகரித்து வருகிறது. கொரோனா தொற்றுப் பரவல் காலத்திலும்கூட பல்வேறு அடக்குமுறை சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. உலகின் மிக துடிப்பான ஜனநாயகத்தில் மோடி ஆட்சியில் ஆழமான நிழல் படிந்துள்ளது. இவ்வாறு கார்ல் விக் குறிப் பிட்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அச்சிடப்பட்ட பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில், பிரதமர் மோடியை ‘இந்திய பிரிவினைவாதிகளின் தலைவர்” என்றும் ‘டைம்’ ஏடு வர்ணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

;