நேற்றைய தொடர்ச்சி...
1936ஆம் ஆண்டு மே மாதத்தில் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் ஒன்றை பாண்டிச்சேரியில் நடத்துவதற்கு தொழிற்சங்கம் அனுமதி கோரியது. ஆனால் புதுவையின் பிரெஞ்சு நிர்வாகம் கூட்டம் நடத்தத் தடை விதித்தது. எனவே ஏராளமான தொழிலாளிகள் வில்லியனூர் பகுதியைத் தாண்டி இந்திய எல்லைக்குள்ளிருந்த பொம்மை என்ற இடத்தில் கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் சுப்பையாவுடன் தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரியும் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபரங்களை அறிந்த மில் நிர்வாகங்கள் ஆத்திரமடைந்தன. தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. நெருக்கடியை உருவாக்கத் தொடங்கின. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு இந்த நடவடிக்கைகளை எதிர்த்தனர். தொழிலாளரை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தி தொழிற்சங்க இயக்கத்தை அழித்தே தீருவது என்ற வெறித்தனமான போக்கில் மில் நிர்வாகங்களும் பிரெஞ்சு ஆட்சியாளர்களும் அதற்குரிய நாளை எதிர்பார்த்திருந்தனர். அந்த நாளும் விரைவிலேயே வந்தது.

1.அமலோற்பவ நாதன், 2.ராஜமாணிக்கம், 3.கோவிந்தசாமி, 4.ஜெயராமன், 5.சுப்புராயன், 6.சின்னையன், 7.பெருமாள், 8.வீராசாமி, 9.மதுரை, 10.ஏழுமலை, 11. குப்புசாமி, 12. ராஜகோபால்
இந்த கொடூரமான படுகொலையைக் கண்டித்து இந்தியாவில் மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டிலும் கண்டனக் குரல்கள் ஒலித்தது. புதுவை நகரம் இரண்டு நாட்கள் கதவடைப்பு செய்து வெறிச்சோடிக் கிடந்தது. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் இருந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இந்த படுகொலைகளை கண்டித்து ஆவேசமான முழக்கங்கள் எழுப்பினார்கள். அடுத்த சில வாரங்களில் பிரெஞ்சு நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி படுதோல்வியடைந்தது. ‘மக்கள் முன்னணி ஆட்சி’ உருவானது. வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பாண்டிச்சேரி தொழிலாளி வர்க்கம் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் அவர்களுக்கு தொழிற்சங்க உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுப்பினர். இந்தப் பின்னணியில் ஏஐடியுசியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு அக்டோபர் 17ஆம் தேதி பாண்டிச்சேரிக்கு வந்தார். துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளிகள் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று அவர்கள் நினைவிற்கு மலரஞ்சலி செய்தார். சுப்பையா அவருக்கு பாண்டிச்சேரி நிலைமையை விளக்கினார். அதைக் கேட்ட நேரு சுப்பையாவுக்கு ஒரு ஆலோசனை கூறினார். அதன்படி சுப்பையா பாரீஸ் சென்று அங்குள்ள அரசாங்கத் தலைவர்களிடம் பாண்டிச்சேரி நிலையை பற்றி எடுத்துக்கூற வேண்டுமென்று கூறியதோடு, பாரில் இருந்த தனது நண்பர்கள் சிலருக்கு அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினார். அதை யேற்ற சுப்பையா 1937ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாரிஸ் சென்று அங்கே மக்கள் முன்னணி தலைவர்களையும் கம்யூ னிஸ்ட் தலைவரான மாரிஸ்தோரேவையும், நாடாளுமன்ற கம்யூ னிஸ்ட் உறுப்பினர்களையும் சந்தித்துப் பேசி பாண்டிச்சேரி தொழி லாளர்களுக்கு உரிமை கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இத்தகைய நிர்ப்பந்தத்தின் விளைவாக புதிய பிரெஞ்சு அரசாங்கம் ஏப்ரல் 6ஆம் தேதியன்று ஒரு உத்தரவிட்டது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைச் சட்டம், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை பிரெஞ்சு இந்தியாவில் அமலாக்க ஆணையிட்டது. இந்த உரிமை கொடுக்கப்பட்டதால் அதுவரை அமலில் இல்லாத பேச்சுரிமை, எழுத்துரிமை கொடுக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்த இருந்த தடை உத்தரவு போன்றவை நீக்கப்பட்டன. இதன் மற்றொரு சிறப்பானது ஆசியக் கண்டத்திலேயே முதன் முதலாக தொழிலாளிகளுக்கு எட்டு மணி நேர வேலை என்பதை கிடைக்கச் செய்தது. அதன் விபரமாவது:
1. தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை உண்டு, 2. தொழிலாளர்களுக்கு கோரிக்கைகள் மீது வேலைநிறுத்தம் செய்யும் உரிமையும் உண்டு, 3. 1938 ஜனவரியில் இருந்து 8 மணி நேர வேலை நாள் அமல்படுத்தப்படும், 4. கூடுதல் நேர வேலைக்கு பகலில் ஒன்றரை மடங்கு இரவில் 2 மடங்கு ஊதியம் வழங்கப்படும், 5. பெண்களுக்கு இரவு நேர வேலை கிடையாது 6. பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால விடுமுறை, எட்டு வாரம் தினமும் அரை நாள் ஊதியத்துடன், 7. வாரம் ஒருநாள் கட்டாய விடுப்பு, 8. தொழிற்சாலை உரிமையாளர்கள் இதனை அமல்படுத்த வேண்டும் மீறினால் கடுமையான தண்டனை.
கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் பாண்டிச்சேரி வீரத் தொழிலாளர் தம் இன்னுயிர் ஈந்து பெற்ற வெற்றி ஆசியாக் கண்டத்திலேயே முதன் முதலாக பெற்ற வெற்றியாகும். எந்த சிக்காக்கோ தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலைக்காக தூக்கு மேடை ஏறினார்களோ, அதை தமது ரத்தத் தியாகம் மூலம் பாண்டிச்சேரி தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் பெற்ற வெற்றி மகத்தானது, போற்றுதலுக்குரியது. இந்த வெற்றியுடன் பாரீசிலிருந்து திரும்பிய தோழர் வ.சுப்பையாவுக்கு பாண்டிச்சேரி மாபெரும் வரவேற்பு அளித்தது.