tamilnadu

img

பேராசிரியரின் பாலியல் தொல்லையால் முதுநிலை மாணவி தற்கொலை?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த முதுநிலை மாணவி பேராசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் நிவேதிதா. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர்  நேற்று  விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு குறிப்பிட்ட பேராசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையே காரணம் என்று சக மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மாணவியில் தற்கொலை குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும்,  5 மணி நேரமாக பல்கலைக்கழக துணை வேந்தரோ, மற்ற நிர்வாகிகளோ சம்பவ இடத்திற்கு வரவில்லை. மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியரை பாதுகாக்கும் நோக்கிலும், மாணவியின் தற்கொலை விவகாரத்தை திசை திருப்பும் நோக்கில்  கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்,  விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்நிலையில் மாணவியின் தற்கொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை காவல்துறையினரை வைத்து கல்லூரி நிர்வாகம் மிரட்டி வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்
 

;