tamilnadu

img

டிரெய்லரே போதும், படமெல்லாம் வேண்டாம்!

மோடிக்கு கபில் சிபல் பதிலடி

புதுதில்லி, செப்.14- ‘இந்த நாடு பாஜக ஆட்சியின் டிரெய்லரைப் பார்த்து விட்டது. முழுப்படம் இனிமேல்தான் இருக் கிறது’ என்று பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் பேசியிருந்தார்.  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, வேலையின்மை அதிகரிப்பு, தொழில் உற்பத்தி சரிவு, பொருளா தார வீழ்ச்சி, வேலையில்லா திண் டாட்டம் அதிகரிப்பு- இவையெல் லாம் டிரைலர் என்றால், மெயின் பிக்சர் - அதாவது முழுப்படம் எப் படி இருக்குமோ? என்ற அச்சத்தை மோடியின் பேச்சு ஏற்படுத்தியது.  மக்களின் இந்த மனநிலையை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர் கபில் சிபல் அப்பட்டமாக தனது ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தி யுள்ளார். “2019 முதல் காலாண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 5 சத விகிதமாக சரிந்துள்ளது. இது கடந்த 16 காலாண்டுகளில் இல்லாத அளவிலான வீழ்ச்சி ஆகும். ஏற்று மதியும் தேக்கநிலை கண்டுள் ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி கண்டி ருக்கிறது. அப்புறம் ரூ.5000 சம்பா திக்கும் நபர், புதிய மோட்டார் வாக னச் சட்டத்தின்படி ரூ.50 ஆயிரம் அபராதம் கட்டுகிறார். வேலை வாய்ப்பின்மை 8.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத் தப்படுகின்றன. போலி வழக்கு களில் எதிர்க்கட்சியினர் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். என்னே ஓர் அற்புதமான டிரெய்லர்?” என்று கபில் சிபல் சாடியுள்ளார். அத்துடன், “மீதமுள்ள பட த்தை நாங்கள் பார்க்க விரும்ப வில்லை” எனவும் கபில் சிபல் கிண் டலாக கூறியுள்ளார்.