வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

மீண்டும் உடல்நலக்குறைவு... எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா...

தில்லி 
மத்திய உள்துறை அமைச்சரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அமித் ஷா உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன் (ஆக,2) ஹரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் ஆகஸ்ட் 14-ஆம் தேதி அமித் ஷா கொரோனாவிலிருந்து மீண்டதாக டிசார்ஜ் ஆனார். 

இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுளளார். தற்போது அமித் ஷா நலமாக உள்ளதாகவும் உடல்வலி, சோர்வு மட்டும் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.    

;