இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆப் ராயல் சொசைட்டி அமைப்பின் 258 வருட வரலாற்றில் அதன் உறுப்பினராக முதல் முறையாக இந்தியாவிலிருந்து காங்கன்தீப் கங் என்ற பெண்மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டுவரும் ஃபெல்லோ ஆப் ராயல் சொசைட்டி அமைப்பில் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் Translational Health Science and Technology Institute (THSTI) என்ற கல்வி நிறுவனத்தின் இயக்குநரான கங்கன்தீப் கங் என்ற பெண் உறுப்பினர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபெல்லோ ஆப் ராயல் சொசைட்டி அமைப்பின் கடந்த 358 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவிலிருந்து உறுப்பினரான முதல் பெண் இவர் ஆவார்.
ஃபெல்லோ ஆப் ராயல் சொசைட்டி அறிவியல் ஆய்வுகளுக்கான புகழ்பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. கங்கன்தீப் கங் இந்தியாவிலுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் அதன் தடுப்பு முறைகளுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். மேலும், தடுப்பூசி தயாரிப்பில் உதவியதோடு அதற்கான ஆய்வு கூடங்களை அமைத்து அதில் சோதனைகளை மேற்கொண்டவர் கங்கந்தீப்.