tamilnadu

img

இந்திய அடையாள மொழி போதனைப் பட்டயப்படிப்பு .... செவித் திறனற்ற மாணவர்களை மட்டுமே அனுமதித்து புதிய பட்டியல் வெளியிடப்படும்.... ஊனமுற்றோர் அமைப்பின் தலையீட்டால் மத்திய அரசு நடவடிக்கை....

புதுதில்லி:
மத்திய அரசின் இந்திய மறுவாழ்வு கவுன்சில், இந்திய அடையாள மொழிபோதனைப் பட்டயம் (DTISL-Diploma inTeachingIndian Sign Language) பாடப்பிரிவிற்கு செவித் திறன் குறைபாடு உடைய மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதற்கே தகுதி படைத்தவர்கள் என்ற நிலைஇருக்கையில், பொதுப்பட்டியலில் உள்ள ஊனமுற்ற மாணவர்கள் அந்தப் பாடப்பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்ததை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் முரளிதரன் சுட்டிக்காட்டி, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகத்தின் கீழ்இயங்கிடும் ஊனமுற்றோருக்கு அதிகாரமளித்திடும் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இதனை அடுத்து, இந்திய மறுவாழ்வு கவுன்சில் சார்பில் வெளியாகும் இணையதளத்தில் 2020 நவம்பர் 16 தேதியன்று ஒருசுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் முரளிதரன் சுட்டிக்காட்டிய தவறு ஒப்புக்கொள்ளப்பட்டு, தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், செவித் திறன் குறைபாடுஉடைய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அனுமதிஅளிக்கப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்படும் என்றும்அதில் கூறப்பட்டிருக்கிறது.இதனை வரவேற்றுள்ள முரளிதரன் அதே சமயத்தில், இவ்வாறு புதிய பட்டியல் வெளியிடும் சமயத்தில் அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், ஊனமுற்றோர் பொதுப்பட்டியல் மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்களுக்கு பொதுப் பட்டியலிலேயே இடம் அளித்திட வேண்டும் என்றும், அந்த வகையில் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.    (ந.நி.)

;