வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

ஊழியருக்கு கொரோனா எதிரொலி....  ஏர் இந்தியா தலைமை நிறுவனம் சீல் வைப்பு...  

தில்லி 
கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் பணியை நாட்டின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா செய்து வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் சிக்கியிருந்த 15 ஆயிரம் இந்தியர்களை அழைத்து வந்தது ஏர் இந்தியா. மிகவும் சவாலான பணியை செய்து வருவதால் ஏர் இந்திய நிறுவனம் உச்சகட்ட பாதுகாப்பில் உள்ளது.

இந்நிலையில் நேற்று (திங்களன்று) ஏர் இந்தியா தலைமை அலுவலக ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு ஏர் இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தை நன்றாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின் மீண்டும் வியாழனன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

;