திங்கள், செப்டம்பர் 27, 2021

tamilnadu

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி, ஏப். 26-புதுச்சேரி முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பரசன் தலைமை தாங்கினார். பள்ளியின் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி கல்வித் துறை துணை இயக்குநர் வெற்றிவேல் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் சுலோச்சனா, பள்ளி மேலாண் மைக்குழுத் தலைவர் தணிகாசலம் (எ) காசிநாதன், ஆசிரியர் பெற்றோர் சங்கத் தலைவர் ராஜலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கலைமகள் தப்பாட்டக் குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் இரகு. அன்புமணியின் விழிப்புணர்வு பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

;