tamilnadu

img

மேலும் 5 தொகுதிகளில் சிபிஎம் போட்டி சிக்கபல்லபூரில் வரலட்சுமி; அசாமில் இளம் மாணவர் பிராஜ் தேகா

மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் மேலும் ஐந்து தொகுதிகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து கட்சி போட்டி யிடும் தொகுதிகள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு எதிராக வாக்குகளை ஒரு முகப்படுத்தும் வகையில் தேர்தல் உத்தியை வகுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜகவை அகற்றுவோம்; மக்களவையில் இடது சாரிகளின் பலத்தை அதிகரிப்போம்; மத்தி யில் மாற்று மதச்சார்பற்ற அரசு அமைவதை உறுதி செய்வோம் என்ற முழக்கத்துடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே கேரளம், மேற்குவங்கம், தமிழ்நாடு உள்பட 45 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் மத்தியக்குழு வெளியிட்டது. தற்போது மேலும் 5 தொகுதிகளும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


கர்நாடகா

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக எஸ்.வரலட்சுமி போட்டியிடுகிறார். இவர் கட்சியின் கர்நாடக மாநில மூத்த தலைவர்களில் ஒருவராவார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவராகவும், கர்நாடக மாநிலத் தலைவ ராகவும் பணியாற்றுகிறார். கர்நாடக மாநி லத்தில் அங்கன்வாடி ஊழியர்களின் பேரன்பைப் பெற்ற தலைவர் வரலட்சுமி. பெங்களூரை உலுக்கிய - லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்களின் பேரணிகளை தலைமையேற்று நடத்தியவர் வரலட்சுமி. கர்நாடக உழைக்கும் மக்களின் போராட்ட தளபதியும் ஆவார்.


ஹரியானா

ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதி யில் கட்சியின் வேட்பாளராக சுக்பீர் சிங்போட்டியிடுகிறார். ஹரியானா மாநிலத்தில் விவசாயிகளின் பல்வேறு போராட்டங் களுக்கு தலைமையேற்றவர் இவர். விவ சாயம் சீர்குலைந்து எண்ணற்ற விவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், நகர்ப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து கட்டுமானத் தொழிலாளிகளாக மாறிய நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானத் தொழி லாளர்களையும் அணிதிரட்டியவர் சுக்பீர் சிங். இவர் இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) அகில இந்தியத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.


அசாம்

அசாம் மாநிலத்தில் லக்கீம்பூர் மற்றும் கோக்ரஜ்கார் ஆகிய இரண்டு தொகுதி களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. லக்கீம்பூர் தொகுதியில் அஜய் குமார் ஹண்டிக் போட்டியிடுகிறார். இவர் மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அன்பைப் பெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார். சிறந்த சமூக செயற்பாட்டாளரும் ஆவார். கோக்ரஜ்கார் தொகுதியில் கட்சியின் இளம் வேட்பாளராக பிராஜ் தேகா போட்டியிடுகிறார். இவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக செயலாற்றி வருகிறார். நாடு முழுவதும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களில் மிக இளம்வயது வேட்பாளர் இவர். அசாம் மாநிலத்தில் பிற தொகுதிகளில் பாஜக அல்லாத மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆதரவளிக்கிறது.


உத்தர்கண்ட்

உத்தர்கண்ட் மாநிலம் தேரி தொகுதியில் கட்சியின் வேட்பாளராக ராஜேந்திர புரோகித் போட்டியிடுகிறார். கட்சியின் மூத்த தலைவரான புரோகித், உத்தர்கண்ட் மாநிலத்தில் மக்களிடையே எழுத்தறிவு இயக்கத்தை பரவலாகக் கொண்டு சென்ற சிறந்த செயற்பாட்டாளர் ஆவார். நாடு முழுவதும் போட்டியிடும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளது கட்சிகளை ஆதரித்தும் பல்வேறு மாநிலங்களில் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளர் களை ஆதரித்தும் கட்சியின் தலைவர்கள் பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,ஹரியானா மாநிலம் ஹிசார் தொகுதியி லிருந்து தமது பிரச்சாரத்தை துவக்கியிருக் கிறார். இத்தொகுதியின் சிபிஎம் வேட்பாளர் சுக்பீர் சிங், அம்பாலா தொகுதியில் போட்டி யிடும் சிபிஐ வேட்பாளர் அருண்குமார் ஆகியோருக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியும், சிபிஐ பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும் பங்கேற்றனர்.

;