கொரோனா தொற்றில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் மீண்டுவந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் எண்ணிக்கை தொற்று கடந்த ஒரு மாத காலமாக சற்று குறைந்துள்ளது. இது கொரோனா தொற்று சிகிச்சையில் சற்று முன்னேற்றத்தை காட்டியுள்ளது. இது நாடு முழுவதும் குறைந்த தொற்றுக்களாகவே உள்ளது. இந்தியாவில் தினசரி இறப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் செல்வதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இறப்பு விகிதம் சற்று குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.