tamilnadu

img

‘பாஜக தமிழகத்திற்கு எதிரான கட்சி’

தூத்துக்குடி, ஏப். 3 -மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி செவ்வாயன்று தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.இப்பிரச்சாரத்தில் கனிமொழி பேசுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மூலம் நாம் பாசிச பாஜக ஆட்சியை முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சி தமிழகத்திற்கு எதிராக செயல்பட கூடிய ஆட்சி. வேதாந்தா நிறுவனத்தின் ஆதரவாக திகழும் ஆட்சி. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி 100 நாட்கள் போராடிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது, 13 பேரை சுட்டு கொன்றது அதிமுக ஆட்சி என்பதை மறவாதீர்கள் என்றார்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கீதாஜீவன், காங்கிரஸ் கட்சியின் ஏபி.சிவி சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.