tamilnadu

img

புதுச்சேரி : ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு

ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி முதல் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டும் பள்ளிகள் செயல்படும். விருப்பப்படும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்.
மேலும், ஜனவரி 18 முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

;