tamilnadu

img

சிலம்பாட்டப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு

புதுக்கோட்டை, ஜன.6- மாநில சிலம்பாட்ட போட்டி புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியியல் கல்லூரியில் கடந்த ஜனவரி 4,5,6 தேதிகளில்  நடை பெற்றது. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் 38-வது சப் ஜுனியர், சீனியர் கலந்து கொண்ட மாநில சிலம்பாட்ட போட்டிகளில் ஆண்கள், பெண்கள் அனைத்து மாவட்ட வீரர்களும்  களமிரங்கினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி ஆகியோர் பரிசுகள் வழங்கி கவுர வித்தனர். முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை.திவ்யநாதன், சிலம்பாட்டக் கழகத் தலைவர் ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.